மீரா மிதுன் உருவ பொம்மை எரித்து சூர்யா ரசிகர்கள் நூதன போராட்டம்!

பல சர்ச்சையான விஷயங்களை குறித்து பேசி தனக்கு தானே பப்ளிசிட்டி கிரியேட் செய்து வருகிறார்.

அந்தவகையில் விஜய் , சூர்யா குறித்து அவதூறு பேசி பலரது மோசமான விமர்சனத்திற்கு ஆளானார். இந்த விவகாரத்தை தொடர்ந்து மீரா மிதுன் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் மீரா மிதுனின் இந்த செயலை கண்டித்து கலாம் சேவை மையம் சார்பில் புதுச்சேரி காவல் நிலையத்தில் சூர்யா ரசிகர் சார்பில் புகார் மனு கொடுத்தனர். இந்த புகாரை மீரா மிதுன் “நடிகர் வடிவேல் காமெடி” என்று நக்கலடித்து ட்வீட் செய்தார். இதையடுத்து கேலி பதிவு செய்த மீரா மிதுனின் உருவ பொம்மைகளை எரித்து, புதுச்சேரி கலாம் இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.