மீண்டும் நடிப்பு தேவைப்படுவது ஏன்? ஜெனிலியா விளக்கம்!

குழந்தை பிறந்த பிறகும் 'கும்'முன்னு இருக்கும் நடிகை ஜெனிலியா! | Genelia  Dsouza Glows In A Bright Attire - Tamil BoldSky

தமிழில் பாய்ஸ், சந்தோஷ் சுப்பிரமணியம், சச்சின், உத்தம புத்திரன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கவுள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது, திருமணத்துக்கு பிறகு கணவருடன் நேரத்தை செலவிட முடிவு செய்ததால் நடிக்கவில்லை. அதன் பிறகு குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பும் வந்தது. வீட்டில் குழந்தைகளை தனியாக விட்டு விட்டு படப்பிடிப்புக்கு சென்றால் கவனத்தை நடிப்பில் முழுமையாக செலுத்த முடியாது. 

அதனால் தான் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தும் மறுத்து விட்டேன். இப்போது குழந்தைகள் வளர்ந்து விட்டதால் மீண்டும் நடிக்க வருகிறேன். அதிக பட வாய்ப்புகளும் வருகின்றன என தெரிவித்துள்ளார்.