மீண்டும் தொடங்கும் விக்ரம் படம்… பரபரப்பில் படக்குழு!

விக்ரம் நடித்துவரும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

COBRA Official First Look | Chiyaan Vikram | AR Rahman | Ajay Gnanamuthu -  YouTube

விக்ரம் நடித்துவரும் 58வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை கூடிய விரைவில் முடித்து விட்டு அடுத்ததாக விக்ரம் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், கொரோனா ஊரடங்கினாள் படவேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஊரடங்கு விலக்கப்பட்டதும் ரஷ்யாவுக்கு சென்று இறுதிகட்ட படப்பிடிப்பை முடிக்க இருக்கிறது கோப்ரா படக்குழு.

இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான தும்பி துள்ளல் பாடலை ஏ ஆர் ரஹ்மான் ஜூன் மாதம் வெளியிட்டார். இந்நிலையில் இப்போது லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் படப்பிடிப்புகளை தொடங்க உள்ளது படக்குழு. இன்னும் 40 நாட்கள் படப்பிடிப்பை முடித்தால் படம் முடிந்துவிடும். அதில் விக்ரம் நடிக்கும் காட்சிகள் மட்டும் 26 நாட்கள் படமாக்கப்பட உள்ளதாம். முதலில் விக்ரம் இல்லாத காட்சிகளை படமாக்கி விட்டு பின்னர் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்க உள்ளாராம் இயக்குனர் அஜய் ஞானமுத்து.