மீண்டும் தள்ளிப்போகிறதா வலிமை? அஜித் ரசிகர்கள் அதிருப்தி!

THALA AJITH on Twitter: "Mass & Classy Fan Made Poster For #Valimai 🔥  #MostAnticipatedVALIMAIMovie… "

வலிமை படப்பிடுப்புப் பணிகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில் படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு தள்ளிப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா லாக்டவுனால் தடைப்பட்டுள்ளது. இதனால் வலிமை படத்தைப் பற்றிய அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா லாக்டவுனுக்கு பின்னர் சில காட்சிகள் சென்னையில் படம் பிடிக்கப்பட்ட நிலையில் இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பை டெல்லியில் நடத்தலாம் என படக்குழு முடிவு செய்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போது சம்மந்தப்பட்ட இடத்தில் அனுமதி வழங்க மறுத்துள்ளது டெல்லி அரசு. இதனால் அடுத்து என்ன செய்வது என படக்குழு யோசனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் படப்பிடிப்பு தொடங்குவதில் இன்னும் தாமதம் ஏற்படும் என்பதால் பட ரிலிஸ் அடுத்த ஆண்டு தீபாவளிக்குத்தான் என சொல்லப்பட்டது. ஆனால் எப்படியாவது படப்பிடிப்பை முடித்து 2021 கோடை விடுமுறைக்காவது படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முடிவில் உள்ளதாம் படக்குழு. தீபாவளிக்கு படத்தின் பர்ஸ்ட் லுக் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.