மீண்டும் தமிழ் சினிமாவில் அனுஷ்கா… சிம்புவுடன் ஜோடி சேர்க்கும் கௌதம் மேனன்!

தமிழ் சினிமாவில் அனுஷ்கா நடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இப்போது மீண்டும் ரி எண்ட்ரி கொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதேபோல பிரபாஸுடன் இவர் நடித்த வரலாற்று சிறப்பு மிக்கதிரைப்படமான பாகுபலி திரைப்படம் இருக்கு பெரும் புகழும் பெற்று தந்தது. கூடவே உலகம் முழுக்க உள்ள ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்திக்கொண்டார்.

ஆனால் இஞ்சி இடுப்பழகி படத்துக்கு பின்னர் அவர் அதிகமான படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அதிலும் தமிழ் படங்களில் அவர் தலைகாட்டவே இல்லை. இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் ஒரு கதை சொல்லி அதில் நடிக்க சொல்லி அனுஷ்காவிடம் சம்மதம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கப்போவது சிம்புதான் என்றும் சொல்லப்படுகிறது.