மீண்டும் சிறியளவிளான நில அதிர்வு கண்டியில் பதிவு

கண்டியில் இன்று (18) காலை சிறியளவிளான நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்று காலை  9.28 அளவில் இந்த நில அதிர்வு கண்டி -திகன மற்றும் பல்லேகல மத்திய நிலையத்திலும் பதிவாகியுள்ளதாக அந்தப் பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல குறிப்பிட்டார்.

மேலும் ரிக்டர் அளவுகோளில் 2.25 ஆக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது என புவியியல் ஆய்வு பணியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் இது தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக  புவிசரிதவியல் மற்றும் சுரங்கத்தொழில் பணியகத்தின் தலைவர் தெரிவித்தார்.

கண்டி, திகன பகுதியில் கடந்த செப்டம்பர் மாதமளவில் ஏற்கனவே  இரண்டிற்கும் குறைவான சிறிய நடுக்கங்கள் பதிவாகியிருந்தன.

இதனையடுத்து இந்த நில அதிர்வு குறித்து ஆராய புவியலாளர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

குறித்த குழுவின் அறிக்கையில்,  நில நடுக்கம் பூமிக்குள் ஆழமான சுண்ணாம்புக் கற்களின் இரண்டு அடுக்குகளுக்கு இடையில் கட்டமைக்கப்பட்ட அழுத்தத்தினால் ஏற்பட்ட வெடிப்பின் விளைவாக ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டிருந்ததாக குறித்த பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.