மீண்டும் ஒரு முறை…

Waiting For Boyfriend Stock Photos And Images - 123RF

மீண்டும் ஒரு முறை
மன்னிப்பு வேண்டி அவன்!
மீண்டும் ஒரு முறை
மறக்க துடிக்கும் அவள்!
மீண்டும் ஒரு முறை
உடைந்து போன இதயம்!
மீண்டும் ஒரு முறை
மரண படுக்கையில் காதல்!

மறைத்த சொற்களின்
நீளமே,
இதயங்களின் விட்டமாய்!

மறைந்த முயட்சியின்
பாரமே,
உறவின் முறிவாய்!

மலர்ந்த பொய்களின்
மணமே,
காதலின் விசமாய்!

மன்னித்த முறைகளின்
எண்ணிக்கையே
அவளின் துண்டுக்களாய்!

மீண்டும் ஒரு முறை அவன் கண்ணீர்
காதல் பரிசாய் அவள் கல்லறைக்குள்!
மீண்டும் ஒரு முறை அவள் காதல்
இறுதி பரிசாய் அவன் இதயத்தில்!