மீண்டும் இணைந்ததா ஓவியா ஆரவ் காதல் ஜோடி?

பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்துகொண்டு பிரபலமான ஆரவ் மற்றும் ஓவியா காதல் ஜோடி இப்போது மீண்டும் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கியதே வீட்டுக்குள் இருந்த ஓவியா மற்றும் ஆரவ் ஆகியோரின் காதல்தான். ஆனால் ஒரு கட்டத்தில் ஓவியாவை ஆரவ் விலக்க மன அழுத்தத்துக்கு ஆளான ஓவியா பாதியிலேயே அந்த வீட்டில் இருந்து வெளியேறினார்.

அதன் பின் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் இப்போது மீண்டும் தங்கள் காதலை புதுப்பித்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த செய்தியானது ஓவியா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.