மீண்டும் ஆல்பம் பக்கம் திரும்பிய ஆதி…

ஹிப்ஆப் சுயாதீன ஆல்பங்கள் மூலம் புகழ் பெற்றவர் ஆதி.

அவரை ஆம்பள படத்தின் மூலம் சுந்தர்.சி இசை அமைப்பாளர் ஆக்கினார். அதன்பிறகு இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மணை 2, துருவா, கதகளி, கவன், இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்ஷன் உள்பட பல படங்களுக்கு இசை அமைத்தார்.

மீசையமுறுக்கு படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் நடிகர் ஆனார். நட்பே துணை, நான் சிரித்தால் படங்களில் நடித்தார்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக புதிய படங்கள் எதிலும் அவர் நடிக்கவில்லை. இதனால் மீண்டும் ஆல்பம் பக்கம் திரும்பியிருக்கிறார்.

தற்போது நான் ஒரு ஏலியன் என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி உள்ளார். இதனை திங்க் மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று வெளியாகிறது.