மில்டனில் வாகன விபத்து ஒருவர் பலி

இன்று காலை 6 மணியளவில் மில்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்

ஹால்டன் (Halton ) பிராந்திய பொலிஸாரின் ட்விட்டர் பதிவில் Guelph Line மேற்கு பகுதிக்கு அருகில் அமைந்துள்ள   Derry Road பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளனர்

பாதையினை விட்டு வாகனம் விலகி சென்றமையே விபத்துக்கு காரணம் என்று பொலிசார் தெரிவித்தனர்

இந்த விபத்தில் வேறு எந்த வாகனங்களும் சம்பந்தப்படவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர்