மின்சாரக்கம்பங்களால் மக்கள் அச்சம்!!மாற்றுமாரும் கோரிக்கை

வவுனியா குடியிருப்பு கித்துள் வீதியில் அமைந்துள்ள பழமையான மின்சார கம்பங்களால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் அச்சமான நிலை ஏற்பட்டுள்ளது.
அதிக மக்கள் நடமாட்டமுள்ள குறித்த வீதியில் நாட்டப்பட்டுள்ள இரும்பினாலான மின்சார கம்பங்களின்  அடிப்பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் குறித்த கம்பங்கள் ஒருபக்கம் சரிந்த நிலையில் வீதிகரைகளில் நிற்கின்றமையால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், பயணிகளும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 


குறித்த இரும்புக்கம்பங்கள் 40 வருடங்களிற்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளதுடன், அது சேதமடைந்து செல்லும் நிலையிலும் புதிய தூண்கள் இதுவரை நாட்டப்படவில்லை.
எனவே அதிகமக்கள் நடமாட்டம் கொண்ட வீதி என்பதை கருத்தில் கொண்டு,அசம்பாவிதங்கள் எவையும் இடம்பெறுவதற்கு முன்னர் குறித்த இரும்பு கம்பங்களை அகற்றி புதிய தூண்களை நாட்டுவதற்கான நடவடிக்கைகளை மின்சார சபையினர் முன்னெடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.