மிசிசாகா பாடசாலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

ஒண்டாரியோ வாகன் (Vaughan ) பகுதியை சேர்ந்த 27 வயதான டெலானோ கிப்சன்(Delano Gibson,) மீது  மிசிசாகா வில் உள்ள ஆரம்ப பாடசாலைக்கு எதிராக  வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது  

ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் செய்தி வெளியீட்டில் பெயரிடப்படாத பாடசாலை நிர்வாகம், தமது கட்டிடத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் அனோமோதய தொலைபேசி அழைப்பு வந்ததாக தெரிவித்து இருந்தது

27 வயதான டெலானோ கிப்சன்(Delano Gibson,) மீது பொது மக்களை குழப்பமடைய செய்தது தவறான செய்தி பரப்பியது போன்ற குற்ற சாட்டுகள் பதிவாகியுள்ளன. அவர் Dec 15 ல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.