மிசிசாகாவில் உள்ள ஒரு நீண்டகால பராமரிப்பு இல்லம் ஒன்றில் covid -19 தொற்றின் காரணமாக 150 பேர் பாதிப்பு

இரண்டு வாரங்களுக்கு முன்பு மிசிசாகாவில் உள்ள ஒரு நீண்டகால பராமரிப்பு இல்லம் ஒன்றில் covid – 19 தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து குடியிருப்பாளர்கள்,ஊழியர்கள் உட்பட 171 பேருக்கு covid -19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது   


Tyndall Seniors Village நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் தற்போது 58 ஊழியர்கள் Covid -19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இங்கு 30 குடியிருப்பாளர்களும்    Covid -19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்,இவர்களில் 18 குடியிருப்பாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 
mississgua வில்  Eglinton  Tomken ரோட் பகுதியில் அமைந்துள்ள இந்த நீண்டகால பராமரிப்பு இல்லத்தில்  கடந்த நவம்பர் மாதம் 5 ம் திகதி மருத்தவ அதிகாரிகளால் Covid -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதில் இருந்து 61 குடியிருப்பாளர்களும் 22 ஊழியர்களும்   Covid -19 தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்,எந்தவொரு இறப்பும் இங்கு பதிவாகவில்லை 


தாங்கள் தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்படுவதாகவும், தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் உறுதியாக  இருப்பதை உறுதிசெய்ய சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும், குடியிருப்பாளர்கள் தங்கள் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு, ஊழியர்களுடன் சேர்ந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை அறிகுறிகளுக்காக பரிசோதிக்கப்படுகிறார்கள் எனவும் நீண்டகால பராமரிப்பு நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது