மாஸ்க் அணியாமல் காரில் சென்ற தமிழ் நடிகைக்கு அபராதம்: எவ்வளவு தெரியுமா?

Aditi Balan news look: இது நம்ம அதிதி பாலனா? பார்த்தா ஷாக் ஆயிடுவீங்க! -  Aditi Balan news stylish look in magazine cover | Samayam Tamil

மாஸ்க் அணியாமல் காரில் சென்ற நடிகைக்கு சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் அனைத்து மக்களும் இன்னும் சில மாதங்களுக்கு கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் மாஸ்க் அணியாமல் வெளியே வரும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என இந்தியா உள்பட பல நாடுகளில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பின் தற்போது சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டுள்ளதால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது இருப்பினும் கொடைக்கானலுக்கு வருபவர்கள் மாஸ்க் அணிந்து வருகிறார்களா? என்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்அந்த வகையில் ’அருவி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை அதிதி பாலாஜி கொடைக்கானலுக்கு தனது காரில் சுற்றுலா சென்றபோது மாஸ்க் அணியாமல் சென்றுக் கொண்டிருந்தார். இதனை பார்த்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருக்கு ரூபாய் 200 அபராதம் விதித்தனர்

இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் கூறியபோது காருக்குள் அமர்ந்து வருபவர்கள் கூட முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர்.