மாலைத்தீவில் விபத்துக்குள்ளான ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானம்

மாலைத்தீவின் சுற்றுலா தலமான பிரதான சர்வதேச நுழைவாயிலான மாலே சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் ‘A320neo’ என்ற விமானம் சேதமடைந்தது.

4R-ANB என பதிவுசெய்யப்பட்ட நான்கு ஆண்டு பழமையான இந்த விமானம், இந்தியப் பெருங்கடல் முழுவதும் அதன் பயணத்தில் இருந்தபோது மாலே சர்வதேச விமான நிலையத்தின் தரை சேவை வாகனத்துடன் தற்செயலாக நேற்று மோதியமையினால் சேதத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று பிற்பகல் 13:13 மணியளவில் கொழும்பிலிருந்து புறப்பட்ட இந்த விமானம் ஒரு மணிநேரம் ஒன்பது நிமிட பயணத்திற்கு பின்னர் மலேயை சென்றடைந்துள்ளது.

இந்த சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது பற்றி மேலதிக விவரங்களை அறிய இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவனம் மாலே சரவதேச விமான நிலையத்தை அணுகியுள்ளது