மார்க்கம் நகரில் வீடு ஒன்றினுள் இறந்து நிலையில் பொலீசாரால் கண்டெடுக்கப்பட்ட நபர் அடையாளம் காணப்பட்டார்

கடந்த புதன்கிழமை மார்க்கம் நகரில் வீடு ஒன்றினுள் இறந்து நிலையில் பொலீசாரால் கண்டெடுக்கப்பட்ட நபர் அடையாளம் காணப்பட்டார்   

புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் Bayview Avenue மற்றும் Highway 7 பகுதியில் உள்ள Feeney Lane உள்ள ஒரு வீட்டிற்கு பொலீசார்  வரவழைக்கப்பட்டனர்.

பலியானவர் தற்போது 58 வயதான Mohammad Mehdi Amin. என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் காணப்பட்ட வாகனமான கறுப்பு நிற Honda CRV ஒண்டாரியோ வாகன பதிவு தகடு இலக்கம்  BNEV917 பற்றிய தகவல் தெரிந்தால் தங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பொலீசார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்