மார்க்கத்தில் 9 மில்லியன் பெறுமதியான வீட்டில் நடத்த சட்டவிரோத சூதாட்டம் கண்டு பிடிப்பு

9 மில்லியன் பெறுமதியான மாளிகைபோல் உள்ள ஒரு வீட்டில் நடந்த சட்டவிரோத சூதாட்டத்தை  York பிராந்திய காவல் துறையினர் கண்டு பிடித்தனர் . சட்டவிரோத Casino  அத்தோடு  SPA என்பன இங்கு இயங்கியதாக அறியப்படுகிறது

York பிராந்திய காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தங்கள் பிரிவு ஒரு தேடல்  உத்தரவின் மூலம்  Major Mackenzie , Warden. சந்திப்பில் ,Decourcy Court தெருவில் அமைத்துள்ள 20000 சதுர அடி அளவு கொண்ட மாளிகை போல் உள்ள இந்த வீட்டினை சோதனை செய்ததாகவும் ,இதன் பொது 11 துப்பாக்கிகள் மற்றும் 1 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை அவர்கள் கைப்பற்றியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆடம்பரமான வீட்டில் தொடர்ந்து தேடியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் சூதாட்ட விளையாட்டு கருவிகள்  (Gaming Machines ), சூதாட்ட மேசைகள், அத்துடன் 1.5  மில்லியன் டாலர்கள் பெறுமதியான மதுபானவைகள் போன்றவை கைப்பற்றப்பட்டன

இதன் விளைவாக 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

“இந்த நிலத்தடி சூதாட்ட விடுதிகளின் ஊடாக நகரும் பணம் குற்றவாளிகளுக்கு பெரும் லாபத்திற்கு வழிவகுக்கிறது, இது விபச்சாரம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பிற முயற்சிகளுக்கு நிதியளிக்கிறது” என்று தலைமை அதிகாரி C Jim MacSween கூறினார்.

மே மாதம் காவல் துறையினருக்கு மார்க்கம் நகரில் நடக்கும்சட்டவிரோத சூதாட்ட இடங்களை பற்றிய இரகசிய தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து Project End Game என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை ஆரம்பமானது.

ஜூலை மாதம் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி சோதனைகள் உட்பட விசாரணையில், 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 33 பேர் 70 க்கும் மேற்பட்ட கிரிமினல் குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

மேலதிக தகவல்களைக் கொண்ட எவரும் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்