’’மாநாடு’’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளீயீடு…செம ஸ்டைலிஸ் சிம்பு…வைரல்

ஒருவழியாக தொடங்கும் சிம்புவின் மாநாடு | simbu manadu shoot to begin soon -  The Subeditor Tamil

சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் போஸ்டர் இன்று காலையில் இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் சில நிமிடங்களுக்கு முன்னர் இரண்டாம் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நடிகர் சிம்பு கொரோனா லாக்டவுனுக்கு முன்னர் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் கொரோனா பாதிப்புக்குப் பின் அவர சுசீந்தரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துவிட்டு இப்போது மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். தற்போது பாண்டிச்சேரியில் அதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய தகவலை வெளியிட்டது படக்குழு. அதில் இன்று காலை 10.42 மணிக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் படி மாநாடு போஸ்டர் வெளியாகி இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

படத்தில் சிம்பு அப்துல் காலிக் எனும் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. போஸ்டரில் சிம்பு ரத்தம் வழிய தொழுகை செய்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள மாநாடு படத்தின் 2 வது போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.