மாகந்துரே மதூஷின் சகாக்களில் ஒருவன் கைது

பாதாள உலகக்குழு உறுப்பினரான மாகந்துரே மதூஷின் சகாக்களில் ஒருவரான வெலிஹிந்த கலு என அழைக்கப்படும் நுவன் ரணவக்க ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம, தெனிபிடிய பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப் படையினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடம் இருந்து 3 கிராம் ஹேரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.