மலை உச்சியில் பிறந்தநாள் கொண்டாடிய வாணி போஜன்!

Will Vani Bhojan play Atharvaa's love interest? | Tamil Movie News - Times  of India

சின்னத்திரை நயன்தாரா என்று சீரியல் ரசிகர்களால் அழைக்கப்பட்டு பெரும் பிரபலமடைந்தவர் நடிகை வாணி போஜன். ஆரம்பத்தில் விமான பணிப் பெண்ணாக இருந்து பின்னர் மாடலிங் திரையில் நுழைந்தார். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பில் தான் சீரியல் நடிகையானார்.

சன்டிவியில் ஒளிபரப்பான ” தெய்வமகள் ” சீரியலில் நடித்து குறுகிய காலத்தில் குடும்ப ரசிகர்களிடையே படுபேமஸ் ஆகிவிட்டார். அதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் நுழைய அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தது. அசோக் செல்வன் நடித்த ‘ஓ மை கடவுளே’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதில் மீரா அக்காவாக நுழைந்துவிட்டார்.

அதையடுத்து தனது இரண்டாவது படத்தில் பிரபல நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகிறார். ஆம், பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பாக கார்த்திக் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறது. இந்நிலையில் நேற்று தனது 32வது பிறந்தநாளை மலை உச்சியில் அமர்ந்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.