மலேசியாவில் இருந்து இலங்கையர் நாடு திரும்பினார்

மலேசியாவில் இருந்து 291 இலங்கையர் நாடு திரும்பியுள்ளனர்.

கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக இலங்கைக்கு வர முடியாமல் மலேசியாவில் சிக்கியிருந்த 291 இலங்கையர்களுடன் கூடிய விசேட விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் இன்று பிற்பகல் 2 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரியவருகிறது.

மேலும் இவ்வாறு வருகை தந்த அனைவரும் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.