மறுமணத்திற்கு தயாராகிட்டாரா? காதலியுடன் நெருக்கமாக விஷ்ணு விஷால்!

எனக்கு ஜுவாலாவை பிடிக்கும், அவருக்கு என்னை பிடிக்கும்: விஷ்ணு விஷால் | We  like each other: Vishnu Vishal about Jwala Gutta - Tamil Filmibeat

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் கூடவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன பின்னர் குடும்பத்தில் பல குழப்பங்கள் நிலவியது. காரணம், விஷ்ணு விஷால் தன்னுடன் நடித்து வந்த நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்ததால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சனை வெடித்தது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஆண்டு பரஸ்பர மனதுடன் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.

புத்தாண்டின் புதிய காதல் ஜோடி - விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டா - Vishnu Vishal  - Jwala gutta dating - எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா | MGR's 100th Birthday  Celebration

பின்னர் நடிகை அமலா பாலுடன் இணைத்து விஷ்ணு விஷால் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் அந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவுடன் காதலில் இருப்பதை இருவரும் உறுதி செய்தனர். விரைவில் மறுமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் ஜுவாலா கட்டா கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது ஜுவாலா காட்டாவை விஷ்ணு விஷால் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.