”மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்கள்: தவறு இருந்தால், இ-மெயில் மூலம் திருத்தலாம்”- அமைச்சர் விஜயபாஸ்கர்!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை, அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ படிப்புக்கு இதுவரை 27 ஆயிரத்து 400 பேர் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளதாக கூறினார். 

ஆன்லைன் பதிவில் தவறுகள் இருந்தால் மாணவர்கள் பயப்பட வேண்டாம் என்றும், அதனை  இ-மெயில் மூலம் திருத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.