மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். அதன்படி கடந்த 3ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. இதற்கான அவகாசம் மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது 

விண்ணப்பித்தவர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இன்று இரவு 11.59 மணி வரை சமர்ப்பிக்கலாம் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. இன்று கடைசி நாள் என்பதால், அதிக விண்ணப்பங்கள் பதிவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விண்ணப்பங்களை சரிபார்த்த பின், வரும் 16-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட ஓரிரு நாட்களில் கலந்தாய்வு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.