மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான, 7.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்-அமைச்சர் செங்கோட்டையன்

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் டிசம்பர் மாதத்திற்குள், 7200 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், 80000 பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு வசதிகள் செய்யப்படும் என்றார். நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில், 400000 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளதாகத் தெரிவித்த அவர், குறிப்பாக கடந்த வருடத்தை விட அதிகமாக அரசு அதிகாரிகளின் குழந்தைகள்  அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.அதே நேரத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்று கட்டாயப்டுத்த முடியாது என்றும் அது தனி மனித உரிமை என்றும் கூறினார்.

தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். விரைவில் நல்ல செய்தி வரும் என்பதால், மருத்துவ சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்திற்காக யாரும் போராட வேண்டாம் என அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுகொண்டார்.