மரக்கடத்தல் முறியடிப்பு வாகனம் கைப்பற்றல்!

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட  மன்னார் வீதி குருக்கலூர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்டவிருந்த முதிரை மரக்குற்றிகள் மற்றும்  ஏற்றி செல்லப்பட்ட வாகனம் என்பன பூவரசங்குளம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த காட்டுப்பகுதியில் முதிரைமரம் மற்றும் பலகைகள்  அறுக்கப்படுவதாகதாக பூவரசங்குளம்  விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து  நேற்று இரவு  அப்பகுதிக்கு சென்ற பூவரசங்குளம் விசேட அதிரடிப்படையினர் குறித்த மரக்கடத்தல் காரர்களை மடக்கி பிடிக்க சென்ற போது   குறித்த மரங்கடத்தல் காரர்கள் வாகனத்தை விட்டு தப்பி ஓடியுள்ளனர். 
குறித்த சம்பவத்தில் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 09 முதிரை  மரக்குற்றிகள்  கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  குறித்த காட்டுப்பகுதியில் மரக்கடத்தலில் பயன்படுத்தப்பட்ட மகேந்திரா வாகனமும் சம்பவ இடத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினரால்  கைப்பற்றப்பட்டது. 

கைப்பற்றபட்ட முதிரை குற்றிகளும் மற்றும் வாகனமும்     வவுனியா பூவரசங்குளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 மேலும் குறித்த மரக்கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடியவர்கள் தொடர்பாகவும்  சட்டவிரோத மரக்கடத்தல் மற்றும் மர அறுவை தொடர்பாகவும் மேலதிக விசாரணைகளை  முன்னெடுத்து வருவதாக பூவரசங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி  எதிரிசூரிய தெரிவித்தார்.