மனோஜ் சின்ஹா ஜம்மு – காஷ்மீரின் புதிய துணை நிலை ஆளுநராக நியமனம்

ஜம்மு – காஷ்மீரின் புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக செயற்பட்டு வந்த கிரிஷ் சந்திரா மர்மு நேற்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உத்தரவுக்கு அமைய மேற்படி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திதகி இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து மூன்று மாதங்கள் கழித்து துணை நிலை ஆளுநராக கிரிஷ் சந்திரா மர்மு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.