மத்தியஸ்தசபை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கூடுகின்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த பல மாதங்களாக நடைபெறாது இருந்த வவுனியா மத்தியஸ்தசபையின் செயற்பாடுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் சி.வரதராசா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த சில மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்தியஸ்தசபையினால் மேற்கொள்ளப்பட்டு வந்த பிணக்குகள் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்பட்டு இருந்தன. தற்போது சுமூகமான நிலைமை ஏற்பட்டு வரும் நிலையில் மீளவும் மத்தியஸ்தசபையின் செயற்பாடுகளை ஞாயிற்றுக்கிழமைகளில் நடாத்துவதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் மத்தியஸ்தசபை கூடவுள்ளதாக தெரிவித்தார்.
இதன்போது நீதிமன்ற பிணக்குகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.