மதிவாணன் இராஜினாமா!

  ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உப தலைவர் கே.மதிவாணன் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

கிரிக்கெட் நிர்வாகத்தில்  வெளிப்படைத்தன்மை இன்மையால் தான் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபைக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியானது.