மஞ்சு வாரியர் நடிப்பில் சக்கை போடு போட்ட திரைப்படம் – ரீமேக்கில் நயன்தராவா?

Happy Birthday, Manju Warrier: 6 career defining moments of the 'Lady  Superstar' | The Times of India

நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் உருவான பிரதீ பூவன்கோழி என்ற படம் உருவாகி கேரளாவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

நடிகை மஞ்சுவாரியரின் சினிமா இரண்டாவது இன்னிங்ஸ் மிகவும் சிறப்பாக அமைந்து வருகிறது. முன்னணி நடிகர்களின் படங்களிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களிலும் அவர் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் பிரதி பூவன்கோழி. இந்த படத்தில் பேருந்தில் தன்னிடம் அத்துமீறும் நபரை மஞ்சு வாரியர் அடித்து வெளுக்கும் காட்சி இணையத்தில் வைரலாக பரவியது. அந்த படத்தின் வெற்றிக்கு அந்த காட்சியும் முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில் அந்த படத்தை இப்போது தமிழில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன. மஞ்சு வாரியரின் கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.