மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு!

சென்னை தி.நகரிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வரும் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும்,  கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு, சிறப்பு கிராம சபை கூட்டத்தை கூட்டுவது, மற்றும் தேர்தல் அறிக்கை தயரிப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

இக்கூட்டத்தின் முடிவில் தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதில், மக்கள் நீதி மய்யத்தின் முதலமைச்சர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டதாகவும், 2021 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க கமல்ஹாசனுக்கு முழு அதிகாரம் வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.