மகனுக்காக போராடிய தாய் மரணம்

வவுனியாவில் 1328 நாட்களாக தனது மகனை கண்டுபிடித்து தர போராடிய தாய் சாவடைந்தார்.வவுனியாவில் தொடர் சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் 1328நாட்கள் போராடி வந்த தாய் பெரியசாமி மனோன்மணி (வயது 70) தனது மகனை காணாமலே சாவடைந்தார்.இவரது மகன் பெரியசாமி செல்வகுமார் (வயது 45) 2008ஆண்டு ஒட்டுக்குழுவால் கடத்தப்பட்டார்.தனது மகன் கடத்தப்பட்டதை  கண்கண்ட சாட்சி தான் என்பதையும் அடிக்கடி கூறினார்.