போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இருவர் கைது

வீரகெட்டிய பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீரகெட்டிய, ஹுன்னகும்புர பகுதியில் போலி 5000 ரூபா நாணத்தாள்கள் 200 உடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வீரகெட்டிய, உடயால பகுதியில் இருந்த போலி நாணயத்தாள்களை அச்சிடும் நிலையம் ஒன்றை சுற்றிவளைத்து மற்றுமொரு நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் குறித்த இடத்தில் இருந்து போலி நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்திய கணணி மற்றும் பிரின்டர் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

27 மற்றும் 39 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.