போலி தகவலால் பணம் சூறை: திருப்பி கொடுப்பதாக வாக்குறுதி

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தின் முசாஹரி தொகுதியில் உள்ள சோதி கோதியா கிராமத்தில் வசிப்பவர் லீலா தேவி (65). இவர் தனது நான்காவது குழந்தையான ஒரு பையனை கடைசியாக 21 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றெடுத்தார். மாவட்டத்தில் உள்ள தேசிய சுகாதாரத் திட்டத்தின் (என்.எச்.எம்) கீழ் தேசிய மகப்பேறு நன்மை பெறும் (என்.எம்.பி.எஸ்) பல பயனாளிகளில் இவரும் ஒருவர்.

இந்தத் திட்டத்தின் கீழ் தாய்க்கு 1,400 ரூபாயும் ஏ.எஸ்.ஹெ.ஏ தொழிலாளிக்கு 600 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. லீலா தேவியின் கணவர் ஒரு விவசாயி. கடந்த 18 மாதங்களில் லீலா எட்டு முறை குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக எச்.டி. வைத்திருக்கும் ஆவணங்கள் காட்டுகின்றன.

இந்த திட்டத்தின்கீழ் இவர் பயனாளியாக சேர்க்கப்பட்டது ஒரு வாரத்திற்கு முன்புதான் இவருக்கு தெரிய வந்துள்ளது. இவரது கணக்கு இருக்கும் ஆபரேட்டர் மையத்தை அணுகியபோது வழக்கு தாக்கல் செய்ய வேண்டாம் எனவும் இவர் பெயரில் பெறப்பட்ட பணத்தைத் திருப்பி கொடுத்துவிடுவதாகவும் கூறியிருக்கிறார்கள்.