போராட்டத்தில் ஈடுபட்ட நைஜீரியர்கள் மீது படையினர் துப்பாக்கிச் சூடு!

வர்த்தக தலைநகர் லாகோஸின் லெக்கி மாவட்டத்தில் பொலிஸ் மிருகத்தனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் நைஜீரியர்கள் மீது படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக சாட்சிகளை மேற்கோளிட்டு சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பல ஆண்டுகளாக மிரட்டி பணம் பறித்தல், துன்புறுத்தல், சித்திரவதை மற்றும் கொலைகள் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒரு சிறப்பு பொலிஸ் பிரிவு, சிறப்பு கொள்ளை தடுப்புப் படைக்கு எதிராக கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான நைஜீரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.