போன் மூலம் ஜனாதிபதி எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார் – ஆளும் கட்சி எம்பி பரபரப்பு தகவல்

இன்று (16) எனக்கு தொலைபேசி மூலமாக அழைப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மிகவும் இழிவான மற்றும் அச்சுறுத்தும் வகையில் ஆத்திரமடைந்து பேசினார் என்று ஆளும் கட்சி எம்பி விஜேதாச ராஜபக்ச சற்றுமுன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

அவர் அரசு தலைவருக்கு பொருந்தாத வகையில் என்னுடன் பேசினார். அவர் பேசிய தொனி ஆத்திரம் நிறைந்ததாக காணப்பட்டது.

கோத்தாபய ராஜபக்ச கைப் பொம்மையாக செயற்படுகிறார்!

இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் முறையிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரான என்னை அவர் அச்சுறுத்தியமையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அவரது அச்சுறுத்தலால் எங்களுடைய சொந்த வாழ்க்கை, குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது எனவும் அவா் கூறினார்.

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தை எதிர்த்து நேற்றைய தினம் (15) நடத்திய ஊடக சந்திப்பில் விஜேதாச ராஜபக்ச கருத்து வெளியிட்ட நிலையிலேயே இவ்வாறு அழைப்பில் அச்சுறுத்தல் விடுத்ததாக அவர் தெரிவித்தார்.