போனி கபூரின் மகனும் பாலிவுட் நடிகருமான அர்ஜுன் கபூருக்கு கொரோனா!

உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதோடு நோய் தடுப்பு பணிகளையும் மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இதனிடையே இந்த நோய் பாதிப்புக்கு பொதுமக்கள் மட்டுமின்றி விளையாட்டு விரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். சமீபத்தில் பாலிவுட் இன் முன்னணி நட்சத்திரங்களான அமிதாப் பட்சன், அபிசேக் பட்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அந்தவரிசையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூரும் இணைந்துள்ளார். சமீபத்தில் அர்ஜுனின் தந்தை போனி கபூரின் வீட்டு ஊழியர்களும் கொரோனா வைர்ஸ் தொற்று உறுதி செய்யப்படிருந்த நிலையில் தற்போது அர்ஜூன் கபூரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அர்ஜுன் கபூர், எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். நான் நன்றாக உணர்கிறேன், நான் அறிகுறியில்லாமல் இருக்கிறேன். மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனையின் கீழ் நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்தியுள்ளேன், மேலும் வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் இருப்பேன். உங்கள் ஆதரவுக்கு நான் அனைவருக்கும் முன்கூட்டியே நன்றி கூறுகிறேன், அடுத்த நாட்களில் எனது உடல்நலம் குறித்து தகவல்களை நான் உங்களுக்கு வழங்குவேன். இந்த அசாதாரண சூழலில் மனிதகுலம் இந்த வைரஸ் பாதிப்பை வெல்லும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.