போனி கபூரிடம் அஜித் கொடுத்த உறுதிமொழி.

Thala 60 Valimai Cast, Crew and Release Date with Pooja Photos, Exclusive  Updates for Fans - TheNewsCrunch

அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’வலிமை’ இந்த படத்தில் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் கொரோனா காரணமாக ஊரடங்கு வந்துவிட்டதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. ஏற்கனவே இந்த படத்திற்காக அஜித் சிக்ஸ்பேக் வைக்க உள்ளதாகவும் அதற்காக அவர் ஜிம்மில் பயிற்சி செய்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் போனிகபூருக்கு அஜித் ஒரு உறுதிமொழி கொடுத்துள்ளாராம். அதாவது ’வலிமை’ படத்தின் படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்திற்கு செல்வேன் என்றும் அதற்கு முன் வேறு எந்த படத்திலும் கமிட் ஆக மாட்டேன் என்றும் உறுதிமொழி கொடுத்துள்ளாராம். இதனால் போனிகபூர் சற்று நிம்மதியாக இருப்பதாக கூறப்படுகிறது
’வலிமை’ படத்தின் தயாரிப்புப் பணி தாமதமானால் அஜித் வேறு ஒரு படத்திற்கு சென்று விடுவாரோ என்ற சந்தேகத்தை ஒரு சிலர் கிளப்பி விட்டதன் அடிப்படையில்தான் அஜித் இந்த உறுதிமொழியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது