போதை பொருள் வழக்கு; ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன் செல்போன்கள் பறிமுதல்!

விஸ்வரூபமெடுக்கும் போ தை ப் பொ ரு ள் விவகாரம் : நடிகை தீபிகா படுகோன் உட்பட  4 நடிகைகளுக்கு சம்மன்!! - Neruppunews

பாலிவுட்டில் போதை பொருள் குறித்த வழக்கு தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பாலிவுட் நடிகைகளின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் போதை பொருள் பயன்பாடு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பாலிவுட் பிரபலங்கள் பலருக்கு போதை பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

சுஷாந்த் சிங் காதலி ரியா அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து நடிகை சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தீபிகா படுகோனிடம் நடத்திய விசாரணையில் போதை பொருள் குறித்து செல்போனில் பேசிக் கொண்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சாரா அலி கான், தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட போதை பொருள் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து நடிகைகளிடம் இருந்தும் அவர்களது செல்போன்களை சிபிஐ பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போதை பொருள் வழக்கு பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.