போதைப்பொருள் வழக்கில் கைதாவாரா தீபிகா படுகோன்? விசாரணை தீவிரம்!

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் தொடர்பான விசாரணையின் போது பாலிவுட் திரையுலகில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக அதிர்ச்சிகர தகவல் வெளியானது.

இதில் பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப்பொருள் தடுப்புப்பிரிவு முகமை சம்மன் அனுப்பியது. இதனையடுத்து தீபிகா படுகோனே உள்ளிட்ட நடிகைகள் இன்று ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. 

தீபிகா படுகோன் தனது மேலாளர் கரிஷ்மா பிரகாஷிடம் போதைப் பொருள் தொடர்பாக பேசிய மெசேஜ்களை அடிப்படையாக வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஐந்து பேர் கொண்ட குழு அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது. அவர் வாட்ஸ் அப் மெசேஜ்கள் அனைத்தும் உண்மை என ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனையடுத்து அவரது மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் ஆஜரானார். முன்னதாக, தீபிகா படுகோன் மற்றும் கணவர் ரன்வீர் சிங் ஆகியோர் வக்கீல் ஒருவரை நேரில் சந்தித்து ஆலோசனை பெற்றதாக தகவல் வெளியானது.