போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வர்த்தகர் ஒருவர் கைது.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வர்த்தகர் ஒருவர் தெமட்டகொட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேந நபரிடம் இருந்து 1 லட்சத்து  40 ஆயிரம் அமெரிக்க டொலர் (56 மில்லியன் மெறுமதியான) உட்பட , 30 மில்லியன் ரூபா பணம் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பணத்தொகையினை வெளிநாட்டில் உள்ள நபரொருவருக்கு பரிமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததாக  பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.