போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் விளக்கமறியலில்

போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த அதிகாரிகளை செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.