போதைப்பொருள்,குற்றம் தொடர்பான அதிகாரிகளிக்கிடையில் சந்திப்பு

சட்டமா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் போதை மருந்துகள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் இந்நாட்டு பிரதானி மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான ஐ.நா. கடல்சார் நிபுணருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சர்வதேச போதைப்பொருள் கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், பயங்கரவாதம் மற்றும் பிராந்தியத்தை பாதிக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.