போதைப்பொருளுடன் பெண் கைது!

போதைப்பொருட்களை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வவுனியாவில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் வவுனியா மடுகந்தை விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலிற்கமைய , நேற்றயதினம் இரவு  வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் சோதனைகளை மேற்கொண்ட விசேடஅதிரடிபடையினர் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த 25 வயது பெண் ஒருவரை கைதுசெய்துள்ளனர். 

அவரிடம் இருந்து ஒருகிலோ 5 கிராம் கேரளாகஞ்சாவும், 2 கிராம் 60 மில்லிகிராம் கெரோயின் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 

கைதுசெய்யப்பட்ட பெண் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடதக்கது.