போதைப்பொருளுடன் சுங்க அதிகாரி கைது.

ஐஸ் போதைப்பொருளுடன் சுங்கப் பிரிவின் அதிகாரி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அந்த சுங்க அதிகாரி கடுவல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த சுங்க அதிகாரியிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும், 125 கிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.