போட்டோ ஷூட்னா இப்படி இருக்கனும் – அடா சர்மா!

சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் அடா சர்மா. ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் ஹீரோயினாக நடித்தவருக்கு, அங்கு பெரிதாக மார்க்கெட் இல்லை. இதனால் அதிக பட்சம் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்தார்.

இதையடுத்து தமிழில் பிரபுதேவா நடிப்பில் சக்தி சரவணன் இயக்கிய ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் நடித்திருந்தார். மும்பையைச் சேர்ந்த தமிழ் பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர் அடா சர்மா தனது சமூகவலைத்தள பக்கம் முழுவதும் கவர்ச்சியான புகைப்படங்களை நிரப்பி வைத்திருப்பவர்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் நேரத்தில் எந்நேரமும் சோசியல் மீடியாவில் குடிமூழ்கி கிடக்கிறார். அவ்வப்போது வித்யாசமாக போட்டோ ஷூட் நடத்துவதில் பெயர் போன அடா ஷர்மா தற்போது செடிகளை உடலில் சொருகிக்கொண்டு ஆடையாக அணிந்தபடி இதுவரை யாரும் யோசித்துக்கூட பார்க்காத வகையில் விசித்திரமான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பியுள்ளார்.