போட்டோவுக்கு பிரேம் போட்ட வடிவேலு

வைகைப்புயல் என அடைமொழியிட்டு சினிமாவில் அழைக்கப்படும் வடிவேலுவை சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்தியது இயக்குனர், நடிகர் ராஜ்கிரன் என்பது நாம் அறிந்ததே.

கவுண்டமணி, செந்தில் என பிரபலமாக இருந்த காமெடியன்கள் நடித்திருந்த இப்படத்தில் வடிவேலுவும் நடிக்க வந்தது சுவாரசியமான நிகழ்வே. கவுண்டமணிக்கு பதிலாக வடிவேலு நடிக்க வந்து கடைசியில் படப்பிடிப்புல் திடீரென கவுண்டமணி வந்து நிற்க திகைத்து போனது ராஜ் கிரண் தான்.

படத்தில் வடிவேலுவுக்கு முதன் காட்சி என்றால் கிளிஜோசியக்காரர் வடிவேலுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் காட்சி. பின் கவுண்டமணி வடிவேலுவை புரட்டி புரட்டி அடிக்கும் காட்சியின் போது அண்ணே, படாது எடத்துல படப்போவுதுண்ணே என வடிவேலு சொந்தமாக தன் ஸ்டைலில் வசனம் பேச, இதை பார்த்த ராஜ்கிரணுக்கு வடிவேலுவை மிகவும் பிடித்துவிட்டதாம்.

ஷூட்டிங் முடிந்து ஊர் கிளம்பிக்கொண்டிருந்த வடிவேலுவை ஊருக்கு போய் என்ன செய்யப்போற என ராஜ்கிரண் கேட்க, அதற்கு வடிவேலு பழையபடி போட்டோவுக்கு பிரேம் போடும் வேலை செய்யப்போறேன் என கூறினாராம்.

அப்போது ராஜ்கிரண் அதெல்லாம் வேண்டாம், இனி என் அலுவலகத்திலேயே தங்கிக்கொள், இங்கே இரு என கூறிவிட்டாராம்.