பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவருக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவருக்கும் பொலிஸ் அத்தியட்சகர், பிரதி பொலிஸ் அத்தியட்சகர்கள் 10 பேருக்கும் மற்றும் 6 பிரதான பொலிஸ் பரிசோதகர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
சேவையின் அவசியம் கருதி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடமன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கோகாலை மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் ஏ.எச்.எம்.டபிள்யூ.சி. அழககோன், கண்டி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.
குருணாகல் மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் பி.எம்.எச்.பீ. சிறிவர்தன, பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ்மா அதிபரின் அலுவலக பதில் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் பெற்றுள்ளார்.
பொலிஸ்மா அதிபரின் அலுவலக பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய டீ.பீ. சந்ரசிறி கோகாலை மாவட்டத்திற்கு பொறுப்பான பிதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் பெற்றுள்ளார்.