பொலிவியாவில் கொரோனா சமூகப் பரவலின் கோரம்.. வீடுகள், தெருக்களில் சடலங்கள் மீட்பு !

பொலிவியா நாட்டின் தெருக்களிலும், வீடுகளில் இருந்தும் கடந்த 5 நாட்களில் 400க்கும் மேற்பட்ட சடலங்களை போலீசார் மீட்டுள்ளனர். இவர்களில் 85 சதவீதம் பேர் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளை கொரோனா வைரஸ் பெரிய அளவில் பாதித்துள்ளது. நாளுக்கு நாள் மரணங்கள் அதிகரித்து வருகிறது. இதுவரைக்கும் 6.15 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். பொலிவியா நாட்டிலும் இதுவரை 60,991 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 18,875 பேர் குணமடைந்துள்ளனர். 2,218 பேர் உயிரிழந்து உள்ளனர்

போலீஸ் அதிகாரி பேட்டி

மீட்கப்பட்ட 400 சடலங்களில் 85 சதவீதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவை. மீதம் வேறு நோயால் இறந்து இருக்கலாம் என்று சாந்தா குரூஸ் போலீஸ் அதிகாரி இவான் ராஜாஸ் தெரிவித்துள்ளார். அந்த நாட்டின் கோச்சபம்பா மற்றும் லா பாஸ் ஆகிய இரண்டு நகரங்களும் அதிகளவில் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டின் தொற்று நோய் அலுவலகம் தெரிவித்துள்ளது.