பொலிசாரால் உலருணவு பொதிகள் வழங்கிவைப்பு

வவுனியா தலைமை பொலிஸ்நிலையத்தின் பொலிசார் பொதுமக்கள் நல்லுறவு பிரிவினரால் ஐந்து கிராமஅலுவலர் பிரிவை உள்ளடக்கிய வறுமைக்கோட்டிற்குட்பட்ட 5 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள்  இன்று வழங்கிவைக்கப்பட்டது.
வவுனியா தலைமை பொலிஸ்நிலைய வளாகத்தில் அதன் பொறுப்பதிகாரி மானவடு தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உதவித்திட்டத்தினை வழங்கிவைத்தனர்.